‘லியோ’ இசை வெளியீட்டு விழா ரத்து

விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகும் படம், ‘லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இதில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தற்போது லியோ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் அதிக டிக்கெட்டுகள் கோரிக்கை மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, ‘லியோ’ இசை வெளியீட்டு விழாவை நடத்தப்போவதில்லை என பட தயாரிப்பு நிறுவனம் செவன் க்ரீன் ஸ்டூடியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிகழ்ச்சிகான டிக்கெட்டுகள் கேட்டு அளவுக்கு அதிகமானோர் தங்களை தொடர்பு கொள்வதால் பாதுகாப்பு காரணங்கள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். அரசியல் அழுத்தத்தாலோ அல்லது வேறு காரணங்களாலோ இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்படவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

The post ‘லியோ’ இசை வெளியீட்டு விழா ரத்து appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: