சவாலுடன் சண்டையிட்ட சமந்தா

தசை அழற்சி நோய்க்காக சிகிச்சை பெற்று வரும் சமந்தா, தற்போது புதுப்படம் எதுவும் ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் தனது ரசிகர்களுடன் உரையாடிய அவர், இந்தியில் ராஜ், டீகே இயக்கத்தில் நடித்த ‘சிட்டாடல்’ என்ற வெப்தொடரில் அதிரடி ஆக்‌ஷன் காட்சியில் பங்கேற்றது குறித்து பதிலளித்தார். அவர் கூறுகையில், ‘பொதுவாகவே எனக்கு காதல் காட்சிகளை விட, அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் நடிப்பது மிகவும் பிடிக்கும்.

மற்ற காட்சிகளில் நடிக்கும்போது இருக்கும் உற்சாகத்தை விட, ஆக்‌ஷன் காட்சிகளில் நான் அதகளம் செய்து நடிக்கும்போது உற்சாகமாகி விடுவேன். இதற்கு என்ன காரணம் என்று சொல்ல முடியவில்லை. இந்தி ‘சிட்டாடல்’ தொடரில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளேன். இப்படி நடிப்பது சற்று பாதுகாப்பின்மை என்றாலும், கடினமாக இருக்கக்கூடிய ஒரு செயலை நூறு சதவீதம் நேர்த்தியாகச் செய்து முடிக்கும் மிகப்பெரிய சவாலை நேசித்தேன். நான் நடித்திருக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் கண்டிப்பாக எனது ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.

The post சவாலுடன் சண்டையிட்ட சமந்தா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: