சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்க, துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கியது. ‘சீதா ராமம்’, ‘கிங் ஆஃப் கொத்தா’ ஆகிய படங்களை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் இப்படத்தை சூர்யதேவரா நாகவம்சி, எஸ்.சாய் சவுஜன்யா தயாரிக்கின்றனர். இவர்கள், தனுஷ் நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான ‘சார்’, வாத்தி’ ஆகிய படங்களுக்குப் பிறகு ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் மூலம் வெங்கி அட்லூரியுடன் மீண்டும் இணைந்துள்ளனர்.
‘ஒரு சாதாரண மனிதனின் அளவிட முடியாத உயரங்களை நோக்கிய ஒரு அசாதாரண பயணம்’ என்ற கருத்துடன் இப்படம் உருவாக்கப்படுகிறது. தேசிய விருது பெற்ற இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். துல்கர் சல்மான் ேஜாடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, கரா ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படம், பான் இந்தியா படமாக உருவாக்கப்படுகிறது.
The post அசாதாரண பயணத்தில் துல்கர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.