நடிகை ஸ்வரா பாஸ்கருக்கு பெண் குழந்தை பிறந்தது

மும்பை: பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கருக்கும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஃபகத் அகமதுவுக்கும், கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தான் கர்ப்பமான செய்தியை கடந்த ஜூன் 6ம் தேதி சமூக ஊடகங்களின் மூலமாக ஸ்வரா பாஸ்கர் அறிவித்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு ஸ்வரா பாஸ்கருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அவருக்கு மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. ஸ்வரா பாஸ்கர் – ஃபஹத் அகமது தம்பதியினர், தங்களது மகளுக்கு ரபியா என்று பெயரிட்டுள்ளனர்.

இதுதொடர்பான புகைப்படத்தை ஸ்வரா பாஸ்கர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் ஸ்வரா பாஸ்கர் தனது மகள் ரபியாவை தூக்கி வைத்திருப்பதையும், அவரது கணவர் ஃபஹத் அகமது அவருக்கு அருகில் நின்று ஒன்றாக போஸ் கொடுப்பதையும் பார்க்க முடிகிறது. தற்போது அந்தப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. பல்வேறு தரப்பினரும் மூவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

The post நடிகை ஸ்வரா பாஸ்கருக்கு பெண் குழந்தை பிறந்தது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: