போதைப் பொருள் வழக்கு: நவ்தீப்பிடம் 6 மணி நேரம் விசாரணை

ஐதராபாத்: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தெலுங்கு தயாரிப்பாளர், டைரக்டர் உட்பட சிலரை சில நாட்களுக்கு முன், ஐதராபாத்தில் போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நடிகர் நவ்தீப்புக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரை தேடி வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் நவ்தீப்பிடம் விசாரணை நடத்தினர். அவரின் செல்போனை ஆய்வு செய்தனர். அதில் வாட்ஸ் அப், மெசேஜ் உள்ளிட்ட பல்வேறு தரவுகள் அழிக்கப்பட்டிருந்தன. அதை மீட்க தடயவியல் ஆய்வுக்கு செல்போன் அனுப்பப்பட இருக்கிறது.

The post போதைப் பொருள் வழக்கு: நவ்தீப்பிடம் 6 மணி நேரம் விசாரணை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: