ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக தான் நடிக்கும் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ், மாவீரன் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான மாவீரன் திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் அள்ளியது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 23-வது திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸூக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன், அவருடன் புதிய படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக X தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில்; “பிறந்தநாள் வாழ்த்துகள் ஏ.ஆர்.முருகதாஸ் சார். எனது 23ம் படத்தில் உங்களுடன் இணைவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களிடம் கதை கேட்ட பிறகு மகிழ்ச்சி இரட்டிப்பானது.

இப்படம் எல்லா விதத்திலும் எனக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். படப்பிடிப்பில் பங்கேற்க மிகுந்த ஆவலோடு இருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். SK23 படத்தை இயக்குவது குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் கூறுகையில்; “நாம் ஒன்றாக இணைந்து சினிமாவில் மேஜிக்கை உருவாக்குவோம்” என்று கூறினார்.

The post ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: