முதல்வரின் அறிவிப்புக்கு கமல் பாராட்டு

உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்கிற முதலமைச்சரின் அறிவிப்பை நடிகர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுல அவர்; “பிரியத்திற்குரிய குடும்ப உறுப்பினர் மூளைச்சாவு அடைந்த துயர நிலையிலும், அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்து பிற உயிர்களைக் காக்க முன்வருவது மகத்தான தியாகம்.

இந்தத் தியாகத்தைப் போற்றிடும் வகையில் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் எனும் முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். இந்த அறிவிப்பு உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கும்.” என பதிவிட்டுள்ளார்.

The post முதல்வரின் அறிவிப்புக்கு கமல் பாராட்டு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: