‘தீ இவன்’ படத்துக்கு யு/ஏ

மனிதன் சினி ஆட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரித்துள்ள படம், ‘தீ இவன்’. ஜெயமுருகன் டி.எம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, பாடல்களுக்கு இசை அமைத்து இயக்கியுள்ளார். கார்த்திக், சன்னி லியோன், அத்திகா, சுகன்யா, ‘சேது’ அபிதா, அஸ்மிதா, யுவராணி, ராதாரவி, இளவரசு, ஜான் விஜய், சிங்கம்புலி, சரவண சக்தி, சுமன்.ஜெ, ஹேமந்த், ஸ்ரீதர், சாரப்பாம்பு சுப்புராஜ், கணேஷ் நடித்துள்ளனர். ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஜே.அலி மிர்ஸா பின்னணி இசை அமைத்துள்ளார். படம் குறித்து ஜெயமுருகன் டி.எம் கூறுகையில், ‘ஆம்பள கெட்டா வாழ்க்கை போச்சு. பொம்பள கெட்டா வம்சமே போச்சு’ என்று சொல்வார்கள். ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்த ஆணோ, பெண்ணோ கலாசாரம் மீறி படி தாண்டிவிட்டால், அது அவர்கள் வாழ்க்கையை மட்டுமின்றி, அவர்கள் சந்ததியையே சமாதியாக்கி விடும் என்றும் சொல்வார்கள்.

தாலி கட்டாமல் தாயாவதும், தாலி கட்டாமல் தாரமாக வாழ்வதும் தரம்கெட்ட செயல் என்றும் சொல்வார்கள். முறையற்ற வாழ்க்கையை வாழ்பவர்கள் மட்டுமின்றி, அவர்கள் சந்ததிகளின் வாழ்க்கையும் எப்படி சீரழிகிறது என்பதை படம் சொல்கிறது. குடும்பத்துடன் பார்க்க வேண்டிய இப்படத்தில், சன்னி லியோன் ஆடியுள்ள ‘மேலே ஆகாயம்… கீழே பாதாளம்… நடுவில் ஆனந்தம்’ என்ற குஷியான பாடலும், சுமன்.ஜெ ஆடியுள்ள ‘ரைட்டும் ஓடுது ஒன்வேயில் ராங்கும் ஓடுது’ என்ற பாடலும் இடம்பெறுகிறது. சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது’ என்றார்.

The post ‘தீ இவன்’ படத்துக்கு யு/ஏ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: