சென்னை: பாலா இயக்கத்தில் அருண் விஜய், சமுத்திரகனி, மிஷ்கின் உள்ளிட்டோர் நடிக்கும் ‘வணங்கான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. சூர்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் ‘வணங்கான்’ படத்தை இயக்குநர் பாலா தொடங்கினார். கன்னியாகுமரியில் இதன் முதல் ஷெட்யூல் தொடங்கிய நிலையில், பாலாவுக்கும் சூர்யாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. பின்னர் படத்தில் இருந்து சூர்யா விலகினார். ‘இந்தக் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், சூர்யாவுக்கு இது உகந்ததாக இருக்குமா என்ற ஐயம் ஏற்பட்டது.
இதனால் இந்தப் படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம்’ என்று இயக்குநர் பாலா அறிக்கை மூலம் தெரிவித்தார். பின்னர் இந்தப் படத்தில் அருண் விஜய் இணைய, படப்பிடிப்பைப் தொடங்கினார் பாலா. ரோஷிணி பிரகாஷ் நாயகியாக நடிக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடிக்கிறார். படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரக்கூடிய நிலையில் தற்போது படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.
ஒரு பக்கம் விநாயகர் சிலையும் இன்னொரு கடவுள் இல்லை என சொன்ன பெரியார் சிலையும் வைத்தபடி உடல் முழுக்க சகதியுடன் மேலே பார்த்தபடி இருக்கும் அருண் விஜய் இந்த போஸ்டரில் உள்ளார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, இயக்குர் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படத்தின் டீசர் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஒரு கையில் பெரியார்… மறுகையில் பிள்ளையார்: பாலாவின் ‘வணங்கான்’ ஃபர்ஸ்ட் லுக் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.