சமந்தாவுக்கு சரும பிரச்னை

மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு காரணமாக அவஸ்தைப்படும் சமந்தா, அதற்காக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சமூக வலைத்தளத்தின் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது சமந்தா கூறுகையில், ‘எனது சருமம் நீங்கள் நினைப்பது போல் மினுமினுப்பாக இல்லை. மயோசிடிஸ் சிகிச்சையில் நிறைய ஸ்டிராய்ட்ஸ் எடுத்ததால் சரும பிரச்னைகள் ஏற்பட்டு கஷ்டப்பட்டேன். இனிமேல் புதுப்படங்களின் கதை தேர்வில் ஜாக்கிரதையாக இருக்க முடிவு செய்துள்ளேன். எனக்கு சரிப்பட்டு வரும் கதைகளில் மட்டுமே நடிப்பேன். வித்தியாசமான கதைகளில் நடிக்கவும் ஆர்வம் இருக்கிறது. அதிரடி ஆக்‌ஷன் படங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.

இந்தி ‘சிட்டாடல்’ என்ற வெப்தொடரில் எனது அதிரடி ஆக்‌ஷன் நடிப்பை ரசிகர்கள் பார்க்கலாம். சொந்த வாழ்க்கையில் சரியான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறும் இளைஞர்களுக்கு நான் சொல்லும் அட்வைஸ் என்னவென்றால், சின்னச்சின்ன பிரச்னைகளுக்காக நம் வாழ்க்கை இப்படியாகி விட்டதே என்று நினைக்க வேண்டாம். கஷ்டங்கள் எதுவாக இருந்தாலும், பிரச்னைகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், எல்லாவற்றையும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள். சில நேரங்களில் அவையே நம்மை வலிமையாக மாற்றும். எனது 25 வயதில் இந்த நிலமையில் நான் இருப்பேன் என்றோ, இத்தனை பிரச்னைகளை என்னால் சமாளிக்க முடியும் என்றோ நினைக்கவில்லை. எல்லாவற்றையும் நேர்மறையாக எடுத்துக்கொண்டு முன்னேற முயற்சிக்க வேண்டும்’ என்றார்.

 

The post சமந்தாவுக்கு சரும பிரச்னை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: