கடத்தல் படத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

சென்னை: கரண், வடிவேலு நடித்த ‘காத்தவராயன்’ மற்றும் கதிர், ஹனி ரோஸ் நடித்த ‘காந்தர்வன்’, கஸ்தூரி நடித்த ‘இ.பி.கோ 302’ ஆகிய படங்களை இயக்கிய சலங்கை துரை தற்போது எழுதி இயக்கியுள்ள படம், ‘கடத்தல்’. எம்.ஆர்.தாமோதர், விதிஷா, ரியா, சுதா, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தமிழ்வாணன், ஆர்.ஜெயச்சந்திரன், ரவிகாந்த், ஆதி வெங்கடாசலம், க.சபாபதி, சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன் நடித்துள்ளனர். டி.நிர்மலா தேவியின் பிஎன்பி கிரியேஷன்ஸ், பிரைம் அசோசியேட்ஸ் இணைந்து வழங்க, சவுத் இண்டியன் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. ராஜ்செல்வா ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு தனசீலன் இசை அமைத்துள்ளார். பாவலர் எழில்வாணன், இலக்கியன், சக்தி பெருமாள் பாடல்கள் எழுதியுள்ளனர். எம்.ஸ்ரீகாந்த் பின்னணி இசை அமைத்துள்ளார். செங்கோடன் துரைசாமி தயாரித்துள்ளார். இன்று திரைக்கு வரும் இப்படம் குறித்து சலங்கை துரை கூறுகையில், ‘உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது’ என்றார்.

The post கடத்தல் படத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: