ஸ்ருதி ஹாசனை பின்தொடர்ந்த நபர் யார்? ஏர்போர்ட்டில் பரபரப்பு

மும்பை: நடிகை ஸ்ருதி ஹாசனை மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்ததால் மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது. துபாய் சென்றிருந்த பிரபல நடிகர் கமல்ஹாசனின் மகளான நடிகை ஸ்ருதி ஹாசன் மும்பை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்த புகைப்படக்காரர்கள், வழக்கம் போல் அவரை புகைப்படம் எடுக்க காத்திருந்தனர். அப்போது பதறியடித்துக் கொண்டு ஓடிவந்த ஸ்ருதி ஹாசன், அங்கு நின்றிருந்த புகைப்படக்காரர்களை பார்த்து, ‘என்னை பின்தொடர்ந்து வரும் அந்த நபர் யார்?’ என்று கேட்டார். அதற்கு புகைப்படக்காரர்கள், ‘அந்த நபர் குறித்த விவரங்கள் தெரியவில்லை’ என்றனர்.

முன்னதாக ஸ்ருதி ஹாசனிடம் அந்த நபர் நெருங்கி பழக முயன்றார். அப்போது அந்த நபரிடம் பேசிய ஸ்ருதி ஹாசன், ‘நீங்கள் யார், உங்களை எனக்கு தெரியாது’ என்று சொல்கிறார். இவ்விவகாரம் தொடர்பான வீடியோவை புகைப்படக்காரர் பயானி வெளியிட்டுள்ளார். அதில், ‘ஸ்ருதி துபாயிலிருந்து மும்பை விமான நிலையத்துக்குள் நுழைந்ததும் அந்த நபர் அவரை பின்தொடர்ந்து வருகிறார். தொடர்ந்து ஸ்ருதியிடம் பேச முயல்கிறார். ஸ்ருதி அவரை புறக்கணித்து சென்றாலும் பின்தொடர்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஸ்ருதி ஹாசனை பின்தொடர்ந்த நபர் யார் என்ற சந்தேகத்தையும் எழுப்பி உள்ளார். அந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

The post ஸ்ருதி ஹாசனை பின்தொடர்ந்த நபர் யார்? ஏர்போர்ட்டில் பரபரப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: