ஆமிர்கானின் மகளுக்கு திருமணம்: உதய்பூரில் ஏற்பாடுகள் தீவிரம்

மும்பை: பாலிவுட் நடிகர் ஆமிர்கானின் மகள் ஈராவுக்கு அடுத்தாண்டு தொடக்கத்தில் உதய்பூரில் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவுக்கும், ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தாவுக்கும் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அடுத்த சில நாட்களில் திருமணம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பாலிவுட் நடிகர் ஆமிர்கானின் முதல் மனைவியான ரீனா தத்தாவின் மகளான ஈராவுக்கும், அவரது காதலன் நூபுர் ஷிகாரேவுக்கும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளது.

இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. இருவருக்கும் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் நடைபெறவுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி 3ம் தேதி ஈராவுக்கும், அவரது காதலன் நூபுர் ஷிகாரேவுக்கும் திருமணம் நடக்கவுள்ளதாகவும், திருமண விழாக்கள் மூன்று நாட்கள் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக உடற்பயிற்சி பயிற்சியாளரான நூபுர் ஷிகாரேவை ஜிம்மில் சந்தித்த போது ஈராவுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் பல மாதங்களாக டேட்டிங்கில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆமிர்கானின் மகளுக்கு திருமணம்: உதய்பூரில் ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: