நயன்தாராவின் 75வது படத்தில் ஜெய் நடிக்கிறார்

சென்னை: ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் ‘ராம்’ பார்ட் 2 படத்தில் நடிக்க இருக்கும் நயன்தாரா, தற்போது தமிழில் டெஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமா தயாரிப்பாளரான சசிகாந்த், இயக்குனராக அறிமுகமாகும் ‘டெஸ்ட்’ படத்தில் மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோரோடு இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்த வரிசையில் தனது திரைப்பயணத்தில் 75வது திரைப்படமாக உருவாகும் படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார். இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்க, இந்த படத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. இதில் ஜெய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த தகவல் இப்போதுதான் வெளியாகியுள்ளது.

‘ராஜா ராணி’ படத்துக்கு பின், நயன்தாரா, ஜெய் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சத்யராஜ், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், கார்த்திக் குமார், அச்சுத் குமார், சச்சு, பூர்ணிமா ரவி, ரேணுகா, சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கைதி, மாஸ்டர் படங்களின் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு செய்யும் நயன்தாரா 75 திரைப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு முடிந்த நிலையில் டப்பிங் பணிகளும் தொடங்கியுள்ளது.

The post நயன்தாராவின் 75வது படத்தில் ஜெய் நடிக்கிறார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: