ராஜேஷ் M இயக்கத்தில் ஹன்சிகாவின் மை3” வெப் சீரிஸ்!

இயக்குநர் ராஜேஷ் எம் இயக்கத்தில் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ‘மை3’ சீரிஸ், செப்டம்பர் 15 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஒரிஜினல் சீரிஸில் நடிகை ஹன்சிகா மோத்வானி,  நடிகர்கள் முகேன் ராவ், சாந்தனு ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜனனி, ஆஷ்னா ஜவேரி, அபிஷேக், சக்தி, சுப்பு பஞ்சு அருணாச்சலம் உள்ளிட்டவர்களும் இணைந்து நடித்துள்ளனர். ரொமான்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் “மை3” வெப் சீரிஸ் இயக்குநர் ராஜேஷ் எம் இயக்கும் முதல் வெப் சீரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஹாட்ஸ்டார் இந்த ஒரிஜினல் வெப்சீரிஸின் காமெடி கலந்த டிரெய்லரை கடந்த செவ்வாயன்று வெளியிட்டது. டிரெய்லர் ரசிகர்களை ஈர்த்துள்ளது. முகேன், ஒரு பணக்கார பிஸினஸ்மேன். மனித தொடுதல் என்பது அவருக்கு ஒவ்வாமை. யாராவது அவரைத் தொட்டால் அவருக்கு அலர்ஜியாகி, தீவிரமாக பாதிப்புகுள்ளாகிவிடுவார்.. இளம் விஞ்ஞானியாக வரும் சாந்தனுவால் உருவாக்கப்பட்ட, ‘மை3‘  என்ற மனித உருவ ரோபோவை வாங்க ஆர்வமாக இருக்கிறார். ஆனால் உருவாக்கத்தின் போது ஏற்பட்ட சிக்கலில் செயலிழந்து போன மை3 ரோபோவிற்கு பதிலாக  சாந்தனுவின் உண்மையான முன்னாள் காதலி ஹன்சிகாவை அவரிடம் அனுப்புகிறார். முகேனை ஹன்சிகா சந்திக்கும் போது என்ன நடக்கிறது என்பது தான் இந்தக்கதை.

இந்த வெப் சீரிஸுக்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், இசையமைப்பாளர் கணேசன் இசையமைத்துள்ளார். அஷிஷ் எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார். இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மை 3” வெப் சீரிஸை ட்ரெண்ட்லவுட் நிறுவனம் தயாரித்துள்ளது.

The post ராஜேஷ் M இயக்கத்தில் ஹன்சிகாவின் மை3” வெப் சீரிஸ்! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: