வியக்க வைத்த விஜய்

ஷிவ நிர்வானா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள பான் இந்தியா படம், ‘குஷி’. ஜி.முரளி ஒளிப்பதிவு செய்ய, ஹேஷாம் அப்துல்லா வஹாப் இசை அமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி, ரவிசங்கர் யெலமஞ்சலி தயாரித்துள்ளனர். வரும் செப்டம்பர் முதல் தேதி படம் திரைக்கு வருகிறது. படத்தைப் பற்றி ஷிவ நிர்வானா கூறுகையில், ‘இப்படத்தில் நாங்கள் பயணிக்க ஆரம்பித்து இரண்டு வருடங்களாகி விட்டது. இந்தியா முழுவதும் பயணித்து மலைவாசஸ்தலங்கள், பனிப்பிரதேசங்கள் ஆகிய வெவ்வேறு நிலவியல் அமைப்புகளில் பணியாற்றியது வித்தியாசமான அனுபவம்.

எனது இயக்கத்தில் கடந்த 2019 ஏப்ரல் மாதம் ‘மஜிலி’ படம் திரைக்கு வந்தது. தற்போது ‘குஷி’ படம் வெளியாகிறது. ‘அர்ஜூன் ரெட்டி’ படம் வெளியான பிறகு விஜய் தேவரகொண்டாவின் நடிப்பைப் பார்த்து வியந்து, அவரை வைத்து ஒரு படத்தை இயக்க விரும்பினேன். அவர் மீதான என் அன்பின் வெளிப்பாடுதான் ‘குஷி’ படத்தில் அவர் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரம். இப்படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்தால், நான் எந்த அளவுக்கு அவர் மீது அன்பு வைத்திருக்கிறேன் என்று தெரியும்’ என்றார்.

The post வியக்க வைத்த விஜய் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: