விரைவில் திருமணம் செய்ய விஜய் தேவரகொண்டா விருப்பம்

ஐதராபாத்: விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, சரண்யா பொன்வண்ணன், ரோகிணி, வெண்ணிலா கிஷோர் நடித்துள்ள பான் இந்தியா படம், ‘குஷி’. ஹேஷாம் அப்துல்லா வஹாப் இசை அமைக்க, ஜி.முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி, ரவிசங்கர் யெலமஞ்சலி தயாரித்துள்ளனர். ஷிவ நிர்வானா இயக்கியுள்ளார். வரும் செப்டம்பர் 1ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. அப்போது விஜய் தேவரகொண்டா நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

இந்தியா முழுவதும் இருக்கும் ரசிகர்களுடன் எளிதில் தொடர்புகொள்ளும் வகையிலான அன்பை முன்னிலைப்படுத்திய படம், ‘குஷி’. திருமணம் குறித்தும், உறவு குறித்தும், குடும்பம் என்ற அமைப்பின் மதிப்பு குறித்தும் சுவாரஸ்யமாகப் பேசி இருக்கிறது. தமிழில் என்னைக்கவர்ந்த பல இயக்குனர்கள் இருக்கின்றனர். ஆனால், நான் வெற்றிமாறனின் மிகப்பெரிய ரசிகன். பா.ரஞ்சித் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சமீபகாலமாக இந்த இயக்குனர்களின் படங்களைப் பார்த்து ரசிக்கிறேன். இவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுகிறேன். குறிப்பாக, இயக்குனர் அருண் மாதேஸ்வரனின் ‘கேப்டன் மில்லர்’ படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். ‘லைகர்’ படம் மட்டுமின்றி, நான் நடித்த சில படங்கள் பாக்ஸ் ஆபீசில் தோல்வியைச் சந்தித்துள்ளன. பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன.

தோல்வி குறித்து எப்போதும் நான் வருத்தப்பட்டது இல்லை. அந்த நேரத்தில் கஷ்டமாக இருந்தாலும், உடனே என் மனதை தேற்றிக்கொண்டு கடந்து செல்வேன். தோல்வி இல்லாமல் வாழ்க்கை இல்லை. தோல்வியால் ஒருபோதும் என் வேலையை நிறுத்த மாட்டேன். எது நடந்தாலும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பேன். விரைவில் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். முன்பெல்லாம் திருமணம் பற்றி பேசினாலே தவிர்த்துவிடுவேன். இப்போது அதுபற்றி நிறைய விவாதிக்கிறேன். நண்பர்களின் திருமணத்தை ரசிக்கிறேன். அவர்களில் நல்ல திருமண வாழ்வையும், மோசமான வாழ்வையும் பார்க்கிறேன். இரண்டுமே பொழுதுபோக்காக இருக்கிறது. வாழ்க்கையில் அந்த சேஃப்டரை அனைவரும் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டும்.

The post விரைவில் திருமணம் செய்ய விஜய் தேவரகொண்டா விருப்பம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: