கல்கி 2898 ஏடி விழாவுக்கு செல்லாதது ஏன்? அமிதாப் விளக்கம்

 

 

மும்பை: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி நடிக்கும் படம், ‘புராஜெக்ட் கே’. இதில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். இதற்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வைஜெயந்தி புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பு ‘கல்கி 2898 ஏடி’ என்று மாற்றப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ, அமெரிக்காவின் சான் டியாகோவில் நடந்த காமிக் கான் விழாவில் வெளியிடப்பட்டது. இதில் கமல்ஹாசன், பிரபாஸ், நாக் அஸ்வின், ராணா கலந்துகொண்டனர்.

சிறப்பு வேடத்தில் நடித்துள்ள அமிதாப் பச்சன், விழாவில் பங்கேற்காதது குறித்து விளக்கம் அளித்துள்ளார். ‘இவ்விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று இயக்குனர் நாக் அஸ்வின் என்னிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், அதிக வேலை பளு மற்றும் மருத்துவக் கட்டுப்பாடு காரணத்தால் என்னால் அங்கு செல்ல முடியவில்லை. படத்தின் முதல் தோற்றம் சிறப்பாக இருந்தது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்’ என்றார்.

The post கல்கி 2898 ஏடி விழாவுக்கு செல்லாதது ஏன்? அமிதாப் விளக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: