நாடாளுமன்றத்தில் பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டிய அவசியமில்லை : ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

டெல்லி : பெகாசஸ் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் நாடாளுமன்றத்தில் அது குறித்து விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என்று ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்காக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. காணொளி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்பட அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது இரு அவைகளிலும் பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்திய திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், டெல்லியில் போராடிய விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை  நிறைவேற்றுமாறும் வலியுறுத்தினர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகலாத் ஜோஷி, பெகாசஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் சபாநாயகர் அனுமதி கொடுத்தால் அது குறித்து உறுப்பினர்கள் பேசலாம் என்றும் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, அவை சுமூகமாக நடைபெற அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பை ராஜ்நாத் சிங் கோரியதாக கூறினார். மேலும் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும் போது. எந்த ஒரு பிரச்சனையையும் அவர்கள் முன்வைத்து பேச உரிமை உள்ளது என்றும் தெரிவித்தார்.     …

The post நாடாளுமன்றத்தில் பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டிய அவசியமில்லை : ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி appeared first on Dinakaran.

Related Stories: