சென்னை: கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கிறார், எஸ்.ஜே.சூர்யா. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம், ‘இந்தியன் 2’. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்நிலையில், வில்லன் கேரக்டரில் நடிப்பதற்கு எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த சில நாட்களாக அவர் படத்தில் நடித்து வருகிறார். இத்தகவலை படக்குழு சஸ்பென்சாக வைத்திருந்தது. தற்போது அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா போட்டோ எடுத்துக்கொண்டார். தற்போது அந்த போட்டோ வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்துதான் பலருக்கும் இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பது தெரியவந்தது. கமல்ஹாசனுடன் இதுவரை எஸ்.ஜே.சூர்யா நடித் தது கிடையாது. இதுவே அவர்கள் இணையும் முதல் படமாகும். தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
The post கமல்ஹாசனுடன் இணைந்தார் எஸ்.ஜே.சூர்யா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.