மலேசியாவில் விஜய் சேதுபதியை முற்றுகையிட்ட ரசிகர்கள்

சென்னை: விஜய் சேதுபதி தனது 51வது படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2018ல் கவுதம் கார்த்திக்குடன் நடித்திருந்த ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் இயக்குனர் ஆறுமுக குமாருடன் மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். ‘காக்கா முட்டை’ படத்தின் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘கடைசி விவசாயி’ படத்தை வெளியிட்ட 7Cs எண்டர்டெயின்மெண்ட் தனது 5வது தயாரிப்பாக இப்படத்தை தயாரிக்கிறது.

மலேசியாவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதியைப் பார்ப்பதற்கு நேற்று முன்தினம் ரசிகர்கள் திரண்டனர். கூட்டம் அதிகமானதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே போலீஸ் வந்து கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது. இதையடுத்து ரசிகர்களுடன் கைகுலுக்கி, செல்பி எடுத்து அனுப்பி வைத்தார் விஜய் சேதுபதி. இந்த போட்டோக்களும், வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

The post மலேசியாவில் விஜய் சேதுபதியை முற்றுகையிட்ட ரசிகர்கள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: