எந்த இடத்திலும் நிற்காத ஸ்பீடான படம் ‘டக்கர்’: சித்தார்த் பேட்டி

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் தயாரிப்பில் கார்த்திக் ஜி கிரிஷ் எழுதி இயக்கியுள்ள படம், ‘டக்கர்’. இதில் சித்தார்த், திவ்யான்ஷா கவுசிக், அபிமன்யு, முனீஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் நடித்துள்ளனர். தந்தை, மகன் ஆகிய இரட்டை வேடங்களில் யோகி பாபு நடித்துள்ளார். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் இன்று திரைக்கு வரும் இப்படம் குறித்து சித்தார்த் கூறுகையில், ‘எந்த இடத்திலும் நிற்காத ஸ்பீடான படம் இது. ‘டக்கர்’ என்ற தலைப்புக்கு அர்த்தம் பார்டர் தாண்ட, தாண்ட மாறும். வட இந்தியாவில் ‘டக்கர்’ என்றால் போட்டி என்றும், சில ஊர்களில் ஸ்மார்ட்டாக இருப்பதை ‘டக்கர்’ என்றும் சொல்வார்கள்.

தவிர மோதல், சூப்பர் என்று நிறைய அர்த்தங்கள் இருக்கிறது. படத்துக்கு ‘டக்கர்’ என்ற தலைப்பை பயன்படுத்த முக்கிய காரணம், மோதல். ஒரு பெண்ணுக்கும், ஹீரோவுக்குமான மோதல் இது. பணக்காரனாக முடியவில்லையே என்ற நிலையில் இளைஞர்களுக்கு ஏற்படும் கோபம்தான் இப்படத்தின் ஹீரோவுக்கும். மியூசிக்கல் ஹிட்டாக நிவாஸ் கே.பிரசன்னாவுக்கு ‘டக்கர்’ படம் அமையும். வரும் ஆகஸ்ட் 29ம் தேதியுடன், ஷங்கர் இயக்கத்தில் நான் அறிமுகமான ‘பாய்ஸ்’ படம் திரைக்கு வந்து 20 வருடங்கள் நிறைவடைகிறது. இதுவரை திரைத்துறையில் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்ட நான், இப்போதும் கற்றுக்கொண்டு இருக்கிறேன். அதற்கு முடிவு என்பதே இல்லை’ என்றார்.

The post எந்த இடத்திலும் நிற்காத ஸ்பீடான படம் ‘டக்கர்’: சித்தார்த் பேட்டி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: