பிரசாந்த் நீல் என்னைச் சிறப்பாக மாற்றியுள்ளார்: ஸ்ரேயா ரெட்டி

விஷால் அண்ணனும், ஓரிரு படங்களில் ஹீரோவாக நடித்தவருமான அஜய் கிருஷ்ணாவை காதல் திருமணம் செய்தவர், ஸ்ரேயா ரெட்டி. விஷாலுக்கு வில்லியாக ‘திமிரு’ படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் ‘கேஜிஎஃப் 1’, ‘கேஜிஎஃப் 2’ ஆகிய படங்களின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் ‘சலார்’ என்ற பான் இந்தியா படத்தில் நடிக்கிறார். இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்துள்ளனர்.

படம் குறித்து ஸ்ரேயா ரெட்டி கூறுகையில், ‘பிரசாந்த் நீல் என் கதாபாத்திரத்தை தனக்குள்ளேயே காட்சிப்படுத்தி, இதை நான் திறம்படச் செய்வேன் என்று உறுதியாக நம்பினார். எனது கேரக்டரை மிகச் சிறப்பாக வடிவமைத்துள்ளார். நான் வழக்கமான சினிமா வட்டத்தை விட்டு விலகியிருப்பவள் என்று தெரிந்தும், என் திறமை மீது அதிக நம்பிக்கை வைத்து தேர்வு செய்தார். எனது எல்லைகளை மீறி என்னைப் பயணிக்க வைத்து, நேற்றிருந்ததை விட இன்று என்னைச் சிறப்பாக மாற்றியுள்ளார்’ என்று நெகிழ்ந்தார்.

The post பிரசாந்த் நீல் என்னைச் சிறப்பாக மாற்றியுள்ளார்: ஸ்ரேயா ரெட்டி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: