சினிமாவில் நேர்மை முக்கியம்: சொல்கிறார் சுனைனா

சென்னை: யெல்லோ பியர் புரொடக்‌ஷன் சார்பில் சதீஷ் நாயர் தயாரித்து இசை அமைத்துள்ள படம் ‘ரெஜினா’. சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படம் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. மலையாள இயக்குனர் டொமின் டிசில்வா இயக்கியுள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் சுனைனா பேசியதாவது:

2006ல் என்னுடைய குடும்பத்துடன் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கின்ற ஒரு சின்னப்பெண்ணாக இருந்தேன். அந்த சமயத்தில் சினிமாவிற்கு வருவேனா என்றெல்லாம் தீர்மானிக்கவில்லை. விடுமுறைக்காக ஐதராபாத் உறவினர் வீட்டுக்கு வந்தபோது நான் பார்த்த படம் தான் ரஜினி நடித்த ‘சந்திரமுகி’. அதற்கு முன்பு நடிகை ஆக வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும் சந்திரமுகி என் ஆர்வத்தை மேலும் தூண்டியது.

தொடர்ந்து சூர்யா நடித்த ‘கஜினி’ உள்ளிட்ட படங்களை பார்த்தபோது, நான் ஒரு தென்னிந்திய மொழி நடிகையாகத்தான் ஆகவேண்டும் என முடிவு செய்தேன். அந்த சமயத்தில் எனக்குள்ளே சினிமா குறித்த ஆர்வம், உண்மை, நேர்மை எல்லாம் இருந்தது. இப்போது வரை அது எனக்கு இருக்கிறது. அது சினிமாவுக்கு முக்கியமாக இருக்கிறது. நான் இதுவரை நடித்த கேரக்டர்களை கவனித்தால் அது தெரியும். இனியும் அப்படித்தான் இருப்பேன்.

The post சினிமாவில் நேர்மை முக்கியம்: சொல்கிறார் சுனைனா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: