ஜூன் 17ல் மாஸ்டர் பிளான் போட்ட நடிகர் விஜய்

சென்னை: 10ம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை நடிகர் விஜய் சந்திக்கவுள்ளார். மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் வழங்குகிறார். வரும் 17ம் தேதி விஜய் சென்னை நீலாங்கரையில் சந்திப்பு நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க, வருகின்ற 17ம் தேதி அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சென்னை நீலாங்கரையில் உள்ள R.K Convention Centre-ல் 2023 ஆம் ஆண்டு நடந்து முடிந்த பத்து மற்றும் பணிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளார்.

The post ஜூன் 17ல் மாஸ்டர் பிளான் போட்ட நடிகர் விஜய் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: