மீண்டும் இணையும் கார்த்தி – லிங்குசாமி கூட்டணி

பையா படத்தில் இணைந்து பணியாற்றிய கார்த்தி – லிங்குசாமி கூட்டணி தற்போது மீண்டும் கூட்டணி அமைத்துள்ளதால் அப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது ஜப்பான் திரைப்படம் உருவாகி வருகிறது. குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி போன்ற படங்களை இயக்கிய ராஜு முருகன் தான் இப்படத்தை இயக்கி உள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜப்பான் திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜப்பான் படத்தை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படம், 96 பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் ஒரு படம், லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள கைதி 2, பி.எஸ்.மித்ரனின் சர்தார் 2 என நடிகர் கார்த்தி கைவசம் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது இந்த பட்டியலில் புது வரவாக இணைந்துள்ள திரைப்படம் தான் லிங்குசாமி இயக்க உள்ள படம்.

நடிகர் கார்த்தி ஏற்கனவே லிங்குசாமி இயக்கத்தில் பையா படத்தில் நடித்துள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தற்போது 13 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதால், அது பையா படத்தின் 2-ம் பாகமாக இருக்குமா என்பது தான் ரசிகர்கள் மனதில் எழக்கூடிய கேள்வியாக இருக்கும். ஆனால் அவர்கள் இருவரும் இணைய உள்ள படம் பையா 2 இல்லை என்றும், அது புது கதைக்களத்தில் உருவாகும் படம் என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post மீண்டும் இணையும் கார்த்தி – லிங்குசாமி கூட்டணி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: