கங்குவா புதுவித அனுபவம் கொடுக்கும்: மதன் கார்க்கி புகழாரம்

சூர்யா 42 படத்திற்கு கங்குவா என தலைப்பு வைக்கப்பட்டதில் இருந்து இந்த படத்தின் மீதான எதிர்ப்பு ஏகத்திற்கும் அதிகரித்துள்ளது. இந்தப் படம் பத்து மொழிகளில் 3டி-யில் உருவாவதால் அனைத்து மொழி பார்வையாளர்களையும் கவரும் வகையில் கங்குவா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், சூர்யா, திஷா பதானி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்திற்கு வசனம் எழுதி பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி, கங்குவா படத்தின் சில காட்சிகளை பார்த்துவிட்டு மிரண்டு போய் படத்தை வெகுவாக புகழ்ந்துள்ளார். கங்குவா படம் சிறுத்தை சிவாவின் மற்ற படங்களைப்போல இல்லாமல் வித்தியாசமானதாக இருக்கு.

இப்படத்திற்காக சிவா அதிக உழைப்பை கொடுத்திருக்கிறார். படம் அருமையாக வந்திருப்பதோடு, ஒவ்வொரு வசனமும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என தெரிவித்துள்ளார். சிறுத்தை சிவா தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்ட ஒரு படமாக கங்குவா படம் இருக்கும் என்றும், இந்த படத்தின் மூலம் சூர்யாவின் நடிப்பில் பல புதிய விஷயங்களை ரசிகர்கள் பார்க்கலாம் என கங்குவா படத்தை மதன் கார்க்கி வெகுவாக புகழ்ந்துள்ளார். ஏற்கனவே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் கார்க்கி தற்போது படத்தை புகழ்ந்துள்ளதால், படத்தை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

The post கங்குவா புதுவித அனுபவம் கொடுக்கும்: மதன் கார்க்கி புகழாரம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: