அஜித்துடன் இணைகிறார் அர்ஜுன் தாஸ்

சென்னை: அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கும் படம் ‘விடாமுயற்சி’. அனிருத் இசையமைக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளுக்காக மகிழ்திருமேனி மற்றும் அஜித் ஆகிய இருவரும் லண்டன் சென்று இருப்பதாகவும் அங்கு போட்டோஷூட் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ‘விடாமுயற்சி’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனிலும் அதனை அடுத்து புனேவிலும் நடத்த மகிழ்திருமேனி திட்டமிட்டுள்ளார்.

இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் அர்ஜுன் தாஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘கைதி’ ’மாஸ்டர்’ ’விக்ரம்’ ஆகிய படங்களில் நடித்தவர் அர்ஜுன் தாஸ். இவர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். இந்த படத்தில் அஜித் கேங்ஸ்டராக நடிப்பதாக கூறப்படுகிறது. இதில் அஜித் ஜோடியாக திரிஷா அல்லது பூஜா ஹெக்டே நடிப்பார்கள் என்றும் தகவல் பரவியுள்ளது. ஆனால் இதை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை. டிசம்பரில் படத்தை திரையிட திட்டமிடப்பட்டுள்ளதாம்.

The post அஜித்துடன் இணைகிறார் அர்ஜுன் தாஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: