ஆதிபுருஷ் ரிலீசாகும் தியேட்டர்களில் அனுமாருக்கு ஒரு ‘சீட்’

மும்பை: ராமாயணம் கதையை தழுவி ஓம் ராவத் இயக்கியுள்ள படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வரும் ஜூன் 16ம் தேதி வெளியாக உள்ளது. ‘ஆதிபுருஷ்’ படத்தின் டிரெய்லர் வெளியான 16 மணி நேரத்தில் அனைத்து மொழிகளிலும் 6 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலானது. இதனால் படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில், ‘ஆதிபுருஷ்’ படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விட போவதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிவிட்டர் பக்கத்தில், ‘அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் விசுவாசத்தின் உருவமாக விளங்கும் அனுமனுக்கு மிகுந்த மரியாதையுடன் கூடிய பணிவான அஞ்சலி. ‘ஆதிபுருஷ்’ படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு தியேட்டரிலும் ஒரு இருக்கையை உங்களுக்காக ஒதுக்குகிறோம்’ என்று பதிவிடப்பட்டுள்ளது.

The post ஆதிபுருஷ் ரிலீசாகும் தியேட்டர்களில் அனுமாருக்கு ஒரு ‘சீட்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: