அயோத்தி மந்திரமூர்த்தி இயக்கத்தில் கங்கனா, மாதவன்

சென்னை: அயோத்தி படத்துக்கு பிறகு மந்திரமூர்த்தி இயக்கும் படத்தில் மாதவன், கங்கனா நடிக்கிறார்கள். சசிகுமார், பிரீத்தி அஸ்ரானி நடித்த படம் அயோத்தி. அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கியிருந்தார். ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டு பெற்ற இந்த படம் வெற்றி பெற்றது. தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மந்திரமூர்த்தி இயக்கும் அடுத்த படத்தில் மாதவன் நடிக்க உள்ளார். கதைப்படி வடஇந்திய பெண் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதால் இதில் நடிக்க சில பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கங்கனா ரனவத் தேர்வாகியுள்ளார்.

தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் கங்கனா நடித்தார். பின்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்போது அவர் ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் ‘சந்திரமுகி 2’ படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 3வது தமிழ் படமாகும். இந்த படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அயோத்தி படம் போல் இதுவும் மனித உறவுகளின் சிறப்பை சொல்லும் உணர்வுபூர்வமான படமாக இருக்கும் என படக்குழு கூறுகிறது.

The post அயோத்தி மந்திரமூர்த்தி இயக்கத்தில் கங்கனா, மாதவன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: