லாஸ் ஏஞ்சல்ஸ்: த்ரில்லர் படங்களில் நடித்து புகழ்பெற்ற ஹாலிவுட் மூத்த நடிகர் பேரி நியூமன், வயது மூப்பின் காரணமாக காலமானார். பிரபல ஹாலிவுட் மூத்த நடிகர் பேரி நியூமன் (92), கடந்த சில வாரங்களாக வயது மூப்பின் காரணமாக நியூயார்க்-பிரஸ்பைடிரியன் கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி பேரி நியூமன் காலமானார். அவரது மரணம் குறித்து அவரது மனைவி ஏஞ்சலா மற்றும் குடும்பத்தினர் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.
பேரி நியூமனின் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ‘வானிஷிங் பாயிண்ட்’ போன்ற த்ரில்லர் படங்களில் நடித்த பேரி நியூமன், அமெரிக்க அதிரடி மன்னனாக வலம் வந்தார். கடந்த 2007ல் குரல்வளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். சில மாதங்களில் நோயில் இருந்து குணமடைந்ததால், மீண்டும் ஃபைண்டிங் ஹன்னா (2022) என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post த்ரில்லர் படங்களில் நடித்து புகழ்பெற்ற ஹாலிவுட் மூத்த நடிகர் மரணம்: ரசிகர்கள் இரங்கல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.