இந்தியாவின் வழக்குகள் ஒன்றிணைந்த ” சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை

இந்தியாவின் முன்னணி OTT தளமான ZEE5, அதன் சமீபத்திய நேரடி-டிஜிட்டல் ஒரிஜினல் திரைப்படமான ‘சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை’ படத்தை சமீபத்தில் வெளியிட்டது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், அபூர்வ் சிங் கார்க்கி இயக்கத்தில், கோர்ட் டிரமாவாக உருவாகியுள்ள ‘சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை’, படத்தில் வழக்கறிஞராக மனோஜ் பாஜ்பாய், P.C சோலங்கி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. மேலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று பார்வை எண்ணிக்கையில் சாதனை படைத்தது. ZEE5 தனது பிராந்திய ரசிகர்களுக்காக இப்படத்தை வரும் ஜூன் 7 ஆம் தேதி முதல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடுகிறது.

வினோத் பானுஷாலியின் Bhanushali Studios Limited,, Zee Studios மற்றும் சுபர்ன் S வர்மா ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். அட்டகாசமான கோர்ட் டிராமாவான ‘சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை’ 23 மே 2023 அன்று ZEE5 இல் வெளியானது. மிகப்பெரிய வரவேற்புடன் வெளியான இப்படம் வெளியான முதல் வாரம் முழுதும், பார்வையாளர்களின் எண்ணிக்கையில் மிகப்பெரும் சாதனையைப் படைத்தது. இந்த வருடத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படம் எனும் சாதனையும் படைத்துள்ளது. இப்போது இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு பார்வையாளர்களையும் கவரும் வகையில் பிராந்திய மொழிகளில் வெளியாகிறது.

The post இந்தியாவின் வழக்குகள் ஒன்றிணைந்த ” சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: