மும்பை: ‘ஸ்ரீ 420’, ‘சுனேரி நாகின்’, ‘அப் டில்லி துர் நஹின்’ போன்ற படங்களில் நடித்த பிரபல நடிகை சுலோச்சனா லட்கர் (94), வயது மூப்பு மற்றும் மூச்சுத்திணறல் பிரச்னைகள் காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சுலோச்சனா லட்கர் காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும், பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
200க்கும் மேற்பட்ட இந்தித் திரைப்படங்கள் மற்றும் மராத்தி படங்களில் நடித்த சுலோச்சனா லட்கர், அம்மா வேடங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இவரது உடல் தகனம் இன்று மாலை மும்பையில் நடைபெறவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
The post வயது மூப்பு காரணமாக பிரபல மூத்த நடிகை மரணம்: ரசிகர்கள் இரங்கல்..! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.