வைரலாகும் இந்திரஜா ரோபோ ஷங்கரின் திருமணம் குறித்த கமெண்ட்: ரசிகர்கள் வாழ்த்து

நடிகை இந்திரஜா ரோபோ ஷங்கர் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான பிகில் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகர் ரோபா ஷங்கரின் மகளான இந்திரஜா. இவர் பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள். பிகிலை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தில் அதிதி ஷங்கரின் தோழியாக நடித்திருந்தார். இவர் கடந்த சில நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கார்த்திக் என்ற நபருடன் இணைத்து ‘மாமா’ என்று தலைப்பிட்டு சில பதிவுகளை பதிவிட்டு வந்தார்.

இதனையடுத்து இவரைத் தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்களா என ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்ய, ஆம், ஆனால் இன்னும் நாள் குறிக்கவில்லை. அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வரும். என்னுடைய சந்தோஷத்தை என் ரசிகர்களிடமும், நல விரும்பிகளிடமும் கண்டிப்பாக பகிர்ந்து கொள்வேன்” என்று பதில் அளித்துள்ளார். அதற்கு அவரின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

The post வைரலாகும் இந்திரஜா ரோபோ ஷங்கரின் திருமணம் குறித்த கமெண்ட்: ரசிகர்கள் வாழ்த்து appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: