லாவண்யா திரிபாதி தொடர்ந்து நடிப்பாரா?

ஐதராபாத்: தமிழில் சசிகுமார் ஜோடியாக ‘பிரம்மன்’, சந்தீப் கிஷன் ஜோடியாக ‘மாயவன்’ ஆகிய படங்களில் நடித்தவர், லாவண்யா திரிபாதி. தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்துள்ள அவர், தெலுங்கு நடிகர் வருண் தேஜை தீவிரமாக காதலிக்கிறார். சிரஞ்சீவியின் தம்பியும், தெலுங்கு நடிகருமான நாகேந்திர பாபுவின் மகன் வருண் தேஜ் என்பது குறிப்பிடத்தக்கது. லாவண்யா திரிபாதியும், வருண் தேஜும் சில தெலுங்கு படங்களில் ஜோடியாக நடித்தனர். அப்போது நட்புடன் பழகிய அவர்கள், நாளடைவில் தீவிரமாக காதலிக்க தொடங்கி னர். இந்நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் அவர்கள் நிச்சயதார்த்தம் வரும் 9ம் தேதி ஐதராபாத்தில் நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் குடும்ப உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் கலந்துகொள்கின்றனர். லாவண்யா திரிபாதி, வருண் தேஜ் திருமண தேதி பிறகு அறிவிக்கப்படுகிறது. திருமணத்துக்குப் பிறகும் லாவண்யா திரிபாதி திரைத்துறையில் நீடிப்பார் என்றும், நடிப்புக்கு முழுக்கு போடும் எண்ணம் அவருக்கு ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

The post லாவண்யா திரிபாதி தொடர்ந்து நடிப்பாரா? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: