2வது பாகங்களுக்கு இசை அமைக்கும் கீரவாணி

ஐதராபாத்: தென்னிந்திய மொழிகளில் முன்னணி தயாரிப்பாளராக இருந்த கே.டி.குஞ்சுமோன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் படம் தயாரிக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் அவர் தயாரித்து வெளியிட்ட ‘ஜென்டில்மேன்’ படத்தின் டைட்டிலை மட்டும் பயன்படுத்தி அவர் தயாரிக்கும் படம், ‘ஜென்டில்மேன் 2’. சமீபத்தில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ என்ற பாடலுக்கு ‘பெஸ்ட் ஒரிஜினல் சாங்’ என்ற ஆஸ்கர் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இசை அமைக்கிறார். ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார். விரைவில் ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

ஹீரோவாக சேத்தன் சீனு, ஹீரோயின்களாக நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால் நடிக்கின்றனர். அஜயன் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார். தோட்டா தரணி, அவரது மகள் ரோகிணி அரங்குகள் அமைக்கின்றனர். இதற்கு முன்பு தமிழில் பல படங்களுக்கு ‘மரகதமணி’ என்ற பெயரில் இசை அமைத்த எம்.எம்.கீரவாணி, தற்போது ‘ஜென்டில்மேன் 2’, பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ ஆகிய படங்களுக்கு இசை அமைக்கிறார். தற்போது அவர் இசை அமைக்கும் 2 படங்களுமே 2வது பாகங்களாகும்.

The post 2வது பாகங்களுக்கு இசை அமைக்கும் கீரவாணி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: