செங்கோட்டை : செங்கோட்டை அருகே புளியரை எஸ் வளைவு பகுதியில் லாரியில் இருந்து தனியே கழன்றுவிழுந்த கன்டெய்னரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பாரம் ஏற்றிவந்த லாரி ஒன்று, தமிழ்நாடு மாநிலம் தூத்துக்குடியில் பாரத்தை இறக்கிய பிறகு மீண்டும் எர்ணாகுளம் நோக்கி திரும்பிக்கொண்டிருந்தது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தமிழக கேரள எல்லையான புளியரை எஸ் வளைவு பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் வந்தபோது எதிர்பாராதவிதமாக லாரியில் இருந்து கண்டெய்னர் பெட்டி மட்டும் தனியே கழன்று சாலையில் விழுந்தது.
இதனால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய வாகனங்களும், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் வாகனங்களும் நீண்டதொலைவுக்கு அணிவகுத்து நின்றன. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நிலவிய போக்குவரத்து பாதிப்பால் வாகனஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் அவதிக்கு உள்ளாகினர்.
பின்னர் தகவலறிந்து வந்த புளியரை போலீசார் நீண்டநெடிய போராட்டத்திற்குப் பிறகு லாரியில் இருந்து கழன்றுவிழுந்த கன்டெய்னர் பெட்டியை சாலையில் இருந்து அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனர். அதன்பிறகே அங்கு போக்குவரத்து சீரானது.
The post புளியரை எஸ் வளைவு பகுதியில் லாரியில் இருந்து தனியே கழன்றுவிழுந்த கன்டெய்னர் appeared first on Dinakaran.