அன்புக்காக மட்டுமே எப்போதும் துணை நிற்பார்கள்: விஜய் தேவரகொண்டா குறித்து சமந்தா நெகிழ்ச்சி

யசோதா, சாகுந்தலம் ஆகிய படங்களை தொடர்ந்து சுமந்தா தற்போது தெலுங்கில் கதாநாயகியாக நடித்து வரும் படம் குஷி. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்து வருகிறார். மகாநடி படத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படம் இது. இந்த படத்தை இயக்குனர் சிவா நிர்வானா என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துருக்கியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு இல்லாத இடைவெளி நேரங்களில் வெளியிடங்களில் தாங்கள் ஜாலியாக சுற்றியபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

அப்படி தானும் விஜய் தேவரகொண்டாவும் ஹோட்டலில் டின்னர் சாப்பிடும் புகைப்படம் ஒன்றை நடிகை சமந்தா பகிர்ந்துள்ளார். விஜய் தேவாரகொண்டா பற்றி அவர் கூறும்போது, “உங்களுடைய சிறந்ததையும் பார்த்திருக்கிறேன். உங்களுடைய மோசமானதையும் பார்த்து இருக்கிறேன். கடைசியாக வந்ததையும் பார்த்து இருக்கிறேன். முதலாவதாக வந்ததையும் பார்த்திருக்கிறேன். உங்களுடைய ஏற்ற இறக்கங்களையும் பார்த்திருக்கிறேன். சில நண்பர்கள் அன்புக்காக மட்டுமே எப்போதும் துணை நிற்பார்கள்” என்று கூறியுள்ளார் சமந்தா.

The post அன்புக்காக மட்டுமே எப்போதும் துணை நிற்பார்கள்: விஜய் தேவரகொண்டா குறித்து சமந்தா நெகிழ்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: