சேலம், ஏப்.4: விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் சங்கம் மூலம், கல்லூரிக்கு இருசக்கர வாகனமும், விம்ஸ் மருத்துவமனைக்கு எக்கோ இயந்திரமும் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லூரி டீன் செந்தில்குமார் கூறுகையில், ‘எங்கள் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், உள் மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் சிறந்த வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர். ஆண்டு தோறும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் முன்னாள் மாணவர்களுக்கும், கல்லூரிக்குமான பிணைப்பு வலுப்படுவதோடு, வேலை வாய்ப்பு, கருத்தரங்குகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், கல்லூரிக்கு இருசக்கர வாகனமும், விம்ஸ் மருத்துவமனைக்கு எக்கோ இயந்திரத்தையும் வழங்கி உள்ளனர்,’ என்றார். முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் டீனிடம் அன்பளிப்பாக வாகனம் மற்றும் எக்கோ கருவியை வழங்கினர்.
The post அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் விம்ஸ் மருத்துவமனைக்கு எக்கோ இயந்திரம் வழங்கல் appeared first on Dinakaran.