அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மாற்றுத்திறனாளியிடம் ₹2 லட்சம் மோசடி செய்த பெண் கைது

சேலம், மார்ச் 30: சேலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, மாற்றுத்திறனாளியிடம் ₹2 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் செந்தூர் அடுத்த கீழராயபுரம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த்சாமி (30). மாற்றுத்திறனாளியான இவர், சேலம் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், நண்பர் மூலம் சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த வித்யா(39) என்பவர் அறிமுகமானார். பின்னர் அரசியல் பிரமுகர்களை தனக்கு தெரியும் என கூறிய அவர், ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியை பெற்றுத்தருவதாக கூறினார். இதையடுத்து, வீட்டை அடமானமாக வைத்து, ₹2 லட்சம் பணம் கொடுத்தேன். பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் காலதாமதம் செய்தார். இதுதொடர்பாக கேட்டபோது, போலியாக பணியாணை அனுப்பி வைத்துவிட்டு தலைமறைவானார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதில் தெரிவித்தார். இதன்பேரில் செவ்வாய்பேட்டை போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் வித்யாவை கைது செய்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெண்கள் கிளைச்சிறையில் அடைத்தனர்.

The post அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மாற்றுத்திறனாளியிடம் ₹2 லட்சம் மோசடி செய்த பெண் கைது appeared first on Dinakaran.

Related Stories: