ஓமலூர், மார்ச் 26: ஓமலூர் வட்டாரத்தில், பல்வேறு பகுதிகளில் சந்து கடை அமைத்து, சட்ட விரோதமாக அதிக விலைக்கு மது விற்பனை செய்த பூமிநாயக்கன்பட்டி பிரேம்குமார் (45), காமலாபுரம் கோவிந்தன் (59), சிக்கனம்பட்டி பழனியம்மாள் (56) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 25 மது பாட்டில்களை ஓமலூர் போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல், பொது இடத்தில் மது குடித்து, பொதுமக்களுக்கு இடையூறு செய்த இலவமரத்தூர் சுரேந்திரன் (28), புளியம்பட்டி கலை (19), ஆதி (20), பழனியப்பன் (25) உள்ளிட்ட 12பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து, எச்சரிக்கை செய்து ஜாமீனில் அனைவரையும் விடுவித்தனர்.
The post மது விற்ற 3பேர் கைது appeared first on Dinakaran.