சேலம், மார்ச் 27: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கடந்த 3ம் தேதி தொடங்கிய நிலையில் நேற்று முன்தினம் முடிவடைந்தது. பிளஸ் 1 தேர்வு கடந்த 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொது தேர்வு நாளை (28ம் தேதி) முதல் தொடங்குகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள்என மொத்தம் 522 பள்ளிகளைசேர்ந்த 21,008 மாணவர்கள், 20,448 மாணவிகள் என மொத்தம் 41,456 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 183 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் கட்டு காப்பாளர்கள், 190 முதன்மை கண்காணிப்பாளர்கள், 190 துறை அலுவலர்கள், 230 பறக்கும் அலுவலர்கள் உள்பட 3500க்கும்மேற்பட்ட கல்வித்தறை அலுவலர்கள் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தேர்வு மையங்களில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையங்களுக்கு செல்வதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தேர்வு மையங்களில் குடிநீர், கழிப்பறை மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு எழுத தனி வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
The post மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வை 41,456 மாணவர்கள் எழுதுகிறார்கள் appeared first on Dinakaran.