அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ஜாகுவார் போர் விமானத்தில் 2 விமானிகள் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். ஜாம்நகர் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம், நேற்றிரவு வெடித்து சிதறி வயல்வெளியில் விழுந்தது. தகவலறிந்து போலீசார் விரைந்து சென்று படுகாயங்களுடன் கிடந்த ஒரு விமானியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாயமான மற்றொரு விமானியை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்நிலையில், மாயமான விமானி பலியாகி உள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக இந்திய விமானப்படை எக்ஸ் தள பக்கத்தில், ‘போர் பயிற்சி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே விபத்துக்கு காரணம். விமானிகளின் சாதுர்யத்தால் விமான தளம், உள்ளூர் மக்களுக்கு தீங்கு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. விபத்தில் பலியான விமானியின் குடும்பத்தினருடன் நிற்கிறோம்’ என்று பதிவிட்டுள்ளது.
The post குஜராத்தில் பயங்கரம்: பயிற்சியின் போது போர் விமானம் வெடித்து சிதறியது; விமானி பலி appeared first on Dinakaran.