வேலூர், ஏப்.3:இந்தியாவில் சாலை விபத்துக்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் வாகன பாதுகாப்புக்கான விதிமுறைகள் நாளுக்கு நாள் கடுமையாக்கப்பட்டு வருகிறது. கார்களில் ஏர்பேக்குகள் மட்டுமின்றி பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் கூடுதலாக இருப்பது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் வாகனங்களை விற்பனை செய்ய முடியாது. இந்த விதிமுறை மாற்றம் தனிநபர் வாகனங்களுக்கு மட்டுமின்றி, வணிக நோக்கமுள்ள வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 2026ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
2026 ஏப்ரல் 1 முதல் அனைத்து வணிக வாகனங்களிலும் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டத்துடன், கூடுதலாக கூடுதல் பிரேக்கிங் சிஸ்டம் இணைக்கப்பட வேண்டும். 2026 அக்டோபர் 1 முதல், அனைத்து வணிக வாகனங்களும் இந்த மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் பொருத்தப்பட வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் இன்றி சாலைகளில் வாகனங்கள் ஓடுவது தடுக்கப்படும்.இதற்காக அனைத்து வணிக வாகனங்களுக்கும் 2026 ஏப்ரல் 1 முதல், நவீன பிரேக்கிங் சிஸ்டம் டெஸ்ட், டைப் II ஏ என அழைக்கப்படுவது கட்டாயமாகும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, இந்திய சாலைகளில் வணிக வாகனங்கள் உயர் பாதுகாப்பு தரங்களை கொண்டு இயங்குவதை உறுதி செய்யும். இதனால் சாலைகளில் விபத்துக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post வணிக நோக்க வாகனங்களுக்கும் நவீன பிரேக்கிங் சிஸ்டம்;2026 ஏப்ரல் முதல் கட்டாயம்விபத்துகளை தவிர்க்கும் வகையில் appeared first on Dinakaran.