குத்தாலம், ஏப். 4: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரழுந்தூர் மேலையூர் மேலதெரு பகுதியில் விநாயகர், ஏரிக்கரை மாரியம்மன், காளியம்மன் கோவில்கள் உள்ளது. இந்த கோவிலின் 25ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னதாக மாரியம்மன், காளியம்மன், விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஸம்வத்ஸராபிஷேகம் நடைபெற்று சந்தன காப்பு அலங்காரத்துடன் மகாதேவாராதனை நடைபெற்றது. தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு மாரியம்மன், காளியம்மன் வீதி உலா நடைபெற்றது. பூஜைகளை ராஜா மணிகண்டன் குருக்கள் செய்திருந்தார்.
The post மேலத்ெதரு பகுதி கோயில்களில் 25ம் ஆண்டு குத்துவிளக்கு பூஜை appeared first on Dinakaran.