ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் – திரைவிமர்சனம்

2018ம் ஆண்டு வெளியான ‘ஸ்பைடர்மேன்: இன் டு த ஸ்பைடர் வெர்ஸ் படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்திருக்கும் படம். மார்வெல் ஸ்பைடர்மேன் கதையின் காமிக்-அனிமி வெர்சன், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அனிமேஷன் படமாக வெளிவந்துள்ளது. மார்வெல் காமிக்ஸ் புத்தகங்களின் ரசிகர்களுக்கு இது மலரும் நினைவுகளை ஏற்படுத்தும் வகையில் 2டி அனிமேஷன் மற்றும் காமிக் புத்தகத்தின் கலர்களின் பாணியில் உருவாகி வெளிவந்துள்ள படம். வெவ்வேறு பேரலல் பிரபஞ்சங்களைக் காப்பாற்றும் ஸ்பைடர்மேன்கள் அனைவரும் ஸ்பைடர்-வெர்ஸ் என்னும் அமைப்பை மையமாகக் கொண்டு இயங்குகிறார்கள். ஒவ்வொரு ஸ்பைடர் மேனும் ஒரு ரகம், அத்தனைப் பேரும் உலக மக்களுக்காக போராடுகிறார்கள்.

‘ஸ்பைடர் சொசைட்டி’ என்று அழைக்கப்படும் ஸ்பைடர் பீப்பிள் குழு, மிகுவல் ஓ’ஹாரா தலைமையில் செயல்படுகிறது. ஸ்பைடர் மேன்களுக்கென்று தனி வாழ்க்கை இருக்கிறது. அவர்கள் தங்கள் குடும்ப செனடிமென்டுக்குள் சிக்கி விடக்கூடாது. உலகத்தின் நண்மையை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் என்பது அது. இதில் ஸ்பைடர்மேன் மைல்ஸ் மிகுவல் முரண்படுகிறார். இதற்கு ஆதரவாக ஒரு குழுவினரும், எதிராக ஒரு குழுவினரும் இருக்கிறார்கள். இந்த நிலையில் மைல்சின் தந்தை ஆபத்தில் இருக்க… அவரை காப்பாற்ற மைல்ஸ் மிகுவலும், அவருக்கு ஆதரவானவர்களும் கிளம்புகிறார்கள்.

அதோடு இந்த பாகம் நிறைவடைகிறது. அடுத்த பாகமான ‘ஸ்பைடர்மேன்: பியாண்ட் த ஸ்பைடர்-வெர்ஸ்’ பாகத்தில் மைல்ஸ் தன் சகா ஸ்பைடர் மேன்களுடன் இணைந்து தன் தந்தையைக் காப்பாற்றுவதும் உடன் முன்னாள் விஞ்ஞானியும், இந்நாள் சூப்பர் வில்லன் தி ஸ்பாட்டிடம் இருந்து உலகைக் காப்பாற்றுவதும் முக்கியமாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த எபிசோடை பொறுத்தவரை சிறுவர்களை மட்டுமல்லாது பெரியவர்களையும் கருத்தில் கொண்டே படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். காமிக்ஸ் டைப்பிலான அனிமேஷன் படம் என்றாலும் 3டி அனிமேஷனுக்கான டெக்னாஜியுடன் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதற்கேற்ற சுவாரஸ்யமான, காமெடியான திரைக்கதையில் ஜோக்விம் டாஸ் சாண்டோஸ், கெம்ப் பவர்ஸ் மற்றும் ஜஸ்டின் கே. தாம்சன் படத்தை இயக்கி இருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஸ்பைடர் மேன் கேரக்டர்களும் அறிமுகமாகும் போது ஸ்பைடர் மேன் ரசிகர்களின் ஆர்ப்பாட்டத்தால் தியேட்டரே குலுங்குகிறது. சிறுவர், சிறுமிகள் குதூகலமாக பார்க்கிறார்கள், பெரியவர்கள் கொஞ்சம் சிந்தனை கலந்து சிரித்து பார்கிறார்கள். முந்தைய பாகத்தை ரசித்து பார்த்தவர்களுக்கு இந்த பாகமும் பிடிக்கும். மேலும் சூப்பர் ஹீரோவே ஆனாலும் குடும்பமும் முக்கியம், அப்பா, அம்மாவின் ஆசிகளும் தேவை என்னும் சின்னக் கருத்தும் சொல்லிச் செல்கிறது. மொத்தத்தில் கோடை விடுமுறையின் கடைசி பகுதியில் கொண்டாட்டமாக இந்தப் படம் வெளியாகியிருக்கிறது ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்.

The post ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் – திரைவிமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: