‘வெள்ளந்தி’ படத்தின் பாடல்களை புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்

புதுச்சேரி: சஞ்சீவி ராஜ் இயக்கத்தில் கஜா தயாரிக்கும் ‘வெள்ளந்தி’ என்ற படத்துக்கு புதுச்சேரி பாடகர் கிருஷ்ணா பாடல்கள் எழுதி இசை அமைத்துள்ளார். இப்பாடல்களை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டு வாழ்த்தி பேசும்போது, ‘புதுச்சேரியில் இருந்து இசை அமைப்பாளராக அறிமுகமாகும் கிருஷ்ணாவுக்கு வாழ்த்துகள்’ என்றார்.

பிறகு சஞ்சீவி ராஜ், ஒளிப்பதிவாளர் ரத்தின சிங் ஆகியோர் புதுச்சேரி முதல்வரிடம் ஆசி பெற்றனர். படம் குறித்து சஞ்சீவி ராஜ் கூறுகையில், ‘விவசாயம் சம்பந்தப்பட்ட கிராமத்து காதல் கதை இது. குறைந்த பட்ஜெட்டில் தயாரித்து, திறமையான கலைஞர்களை அறிமுகம் செய்வதில் எனக்குப் பெருமை. இசை அமைப்பாளர், பாடகர் கிருஷ்ணாவின் பாடல்கள் சிறப்பாக இருக்கின்றன’ என்றார்.

The post ‘வெள்ளந்தி’ படத்தின் பாடல்களை புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: