திருத்துறைப்பூண்டி, மார்ச் 26: வேளூர் ஊராட்சியில் கல்லூரி மாணவர்கள் கோயில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேளூர் ஊராட்சி தண்டலைச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் தண்டலைச்சேரி நீள்நெறிநாதர் திருக்கோயியில் நாட்டு நலப்பணித் திட்ட அலகு 1 மற்றும் 2-ன் தன்னார்வளர்களால் உழவாரப் பணி அலகு 1 மற்றும் 2ன் திட்ட அலுவலர்கள் பன்னீர்செல்வம் மற்றும் நந்தினி மேற்பார்வையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் செயல் அலுவலர் ராஜேஷ் குமார் கலந்து கொண்டு மாணவர்கள் உழவாரப் பணிகளில் ஈடுபடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இது போன்ற பணிகளில் தொடர்ந்து தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வாழ்த்தி பேசினார்.
The post வேளூர் ஊராட்சியில் கோயில் தூய்மை பணியில் கல்லூரி மாணவர்கள் appeared first on Dinakaran.