காஞ்சிபுரம், மார்ச் 27: காஞ்சிபுரம் மாவட்டம், இயன்முறையில் மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013ன்படி மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் உறுப்பினர்களின் பதவிகாலம் முடிவடைந்த நிலையில், புதியதாக உறுப்பினர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்வதற்கு மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதை ஒழித்தல் குறித்த பொதுத்தொண்டில் ஆர்வமுள்ள 4 உறுப்பினர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை கீழ்க்காணும் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ நளைக்குள் (28ம் தேதி) அனுப்பி வைக்கவும். மேலும், விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இரண்டாம் தளம், காஞ்சிபுரம் – 631 501 என்ற முகவரியில் அனுப்பி வைத்து பயன்பெறலாம்.
The post கண்காணிப்பு குழுவிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.