கீழக்கரை, மார்ச் 27: கீழக்கரையில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இந்நிலையில் கீழக்கரை நகரில் சமீபகாலமாக அடிக்கடி நிலவும் மின் தடையால் மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். தற்போது ரமலான் நோன்பு திறப்பு நேரங்களில் ஏற்படும் மின் தடையால் மன உளைச்சல் அடைந்து உள்ளனர். இரவு வேளையில் நகர் முழுவதும் தினமும் மின்தடை ஏற்படுகிறது. கீழக்கரையில் மின்தடை அற்ற நகராக இருக்க மின்வாரிய உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சீராக மின்சாரம் வழங்கப்படுமா? appeared first on Dinakaran.